‘பார்’ கொத்தணியால் நாடு மயானமாகும் அபாயம்! ராதா எச்சரிக்கை!!

நாட்டை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்து வழமைப்போல நாட்டை கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் தன்னை அர்பணித்து வீட்டிற்குள் முடங்கி தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களையும் பாதுகாக்க போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் செயலில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

அதனாலேயே மதுபானசாலைகளை திறக்கவிட்டு இப்படி நாட்டு மக்களை கொரோனா எனும் அரக்கனிடத்தில் பலி கொடுக்க அரசாங்கம் தயாராகி விட்டதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

” நாட்டை ஒரு மாதத்திற்கு மேலாக மூட அரசாங்கம் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது எதிர்வரும் 21ம் திகதி நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் என கூறி அடுத்த மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கை நீடித்தது இருப்பினும் திடிரென மதுபான சாலைகளை திறந்து மதுபான போத்தல்களை விற்பனை செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம் கொரோனா நாட்டில் மேலும் பல அபாய நிலைக்கு கொண்டு போய் விடும்.

ஒவ்வொரு நகரங்களிலும் எவ்வித சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று மதுபான போத்தல்களை பெற்றுள்ளனர்.இதன் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரியக்கூடும்.

நாட்டில் ஊரடங்கு என அரசாங்கம் போலி நாடகம் ஆடுகின்றது.69 லட் மக்கள் நம்பிக்யோடு வாக்களித்தும் பயனில்லாமல் போய்விட்டது. உறுதியற்ற தலைவரும் ஸ்தீரமற்ற அரசாங்கமும் உருவாகி நாட்டு மக்களை பலி கொடுத்து முழு நாட்டையும் சுடுகாடாக மாற்ற இவ்வரசாங்கம் எத்தனித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றவர்களை அடித்து துரத்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று மதுபான போத்தல்களை வாங்கும் போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மதுபானசாலைகளை திறந்ததன் விளைவு இன்னும் சில நாட்களில் பார் கொத்தணி உருவாக வாய்ப்பு ஏற்படுமென மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.