பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது சொத்துக்களை சேர்ப்பதற்கே என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது சொத்துக்களை சேர்த்துக் கொள்வதற்கு அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழ்வதோ அல்ல. தன்னை முழுமையாக அர்பணித்து மக்களுக்கான  சேவையாற்றவே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்தஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் மற்றும் கட்சியின் செயலாளர் ஆர். சங்கையா ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இறுதி யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை கூறுவதற்கு மூன்று பிரதான தமிழ்க் கட்சிகளிற்கும் தகுதி இல்லை என இதன்போது கட்சியின் செயலாளர் ஆர். சங்கையா தெரிவித்துள்ளார்.