பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோதாரலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுக்கு; அமோக வரவேற்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோதாரலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுக்கு; அமோக வரவேற்பு

கற்குழி பொது அமைப்புக்கள் மற்றும் மக்களின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோதாரலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுக்கு வரவேற்பு நிகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 


இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு மாலை அணிவித்து கற்குழி வீதி ஊடாக அழைத்து வரப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
கற்குழி கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்குழி மக்கள் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.