பாபநாசம் பட நடிகையின் மகள் கதாநாயகியானார்! குவியும் வாழ்த்துகள்!

நடிகை ஆஷா சரத்தின் மகள் உத்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் தொடங்கப்பட்டுள்ளது.

மலையாள படமான திருஷ்யத்தில் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார் ஆஷா சரத். இவர் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்த நிலையில் அவரை நடிக்க வைத்தார் ஜீத்து ஜோசப். இதன் பின்னர் அவர் திருஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் அதே வேடத்தில் நடித்தார். அவரின் நடிப்பால் கவரப்பட்ட கமல் தனது அடுத்தப் படமான தூங்காவனத்திலும் அவரை நடிக்க வைத்தார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஆஷா சரத்தின் மகள் உத்தாரா மலையாள படம் ஒன்றின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். மனோஜ் கனா இயக்கும் படம், கெட்டா. இதில் ஆஷாவும் அவர் மகள் உத்தராவும் அம்மா, மகளாகவே நடிக்கின்றனர். இந்த படத்தின் துவக்க விழா சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

அம்மா-மகளாக நடிக்கிறாங்களாமே.. ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்..  ரசிகர்கள் வரவேற்பு! | Asha Sharath and daughter Uthara to act in Manoj Kana  film - Tamil Filmibeat