பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தற்காலிகமாக தனது வங்கி கிளைகளை மூட தேசிய அவுஸ்ரேலிய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது

பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தற்காலிகமாக தனது வங்கி கிளைகளை மூட தேசிய அவுஸ்ரேலிய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று புதன்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அந்த வங்கி, துரதிர்ஷ்டவசமாக, உடல் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எங்கள் கிளைகளை தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளது.இதேவேளை எப்போதும் போல எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பும் நலனும் தங்களின் முன்னுரிமை என்றும் குறித்த அறிக்கையில் அவுஸ்ரேலிய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் புதிய அறிவிப்பது விடுப்பதாகவும் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த காலகட்டத்தில், இணையம் மற்றும் மொபைல் வங்கி உள்ளிட்ட டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் தொலைபேசி வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இயல்பாகவே சேவைகளை வழங்கும் என்றும் அவுஸ்ரேலிய வங்கி அறிவித்துள்ளது.