பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட மஸ்தான்!

வவுனியா கணேசபுரம் பகுதியில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மன்னார் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவருமான காதர் மஸ்தான் இன்றையதினம் பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார். 
அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்…
நேற்றயதினம் வீசிய பலத்த காற்றினால்  பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற உடனேயே இது தொடர்பாக ஆராயுமாறு அனர்த்தமுகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச்செயலகத்திற்கு தெரியப்படுத்துயிருந்தோம். அவர்கள் உடனடியாக சென்று சேதவிபரங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபாய் நாளையே தினமே அந்த மக்களுக்கு வழங்கப்படும்.அத்துடன் சேதமடைந்த வீடுகளை திருத்தியமைப்பதற்கான உதவிகளும் செய்யப்படும். நாம் மக்கள் பிரதிநிதி என்றவகையில் அவர்களிற்கான தேவைகளை செய்துகொடுப்போம் என்றார்.