பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1கோடி வழங்கிய நடிகர்

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இப்படத்தை ஷங்கர் 50% மேல் எடுத்து முடித்துவிட்டார், இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து லைட் மேன், உதவி இயக்குனர் இறந்தனர்

இந்த செய்தி ஒவ்வொருவரையும் உலுக்கியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்க்ள் குடும்பத்திற்கு ரூ 1 கோடி தருவதாக கமல், ஷங்கர் அறிவித்தனர்.

அதை இன்று பத்திரிகையாளர் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அளித்துள்ளனர்.