பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிய மஸ்தான்

வவுனியா பாவக்குளம் படிவம் 2 அல் அமீன் பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  

குவைட் நாட்டு மக்களின் நிதி அனுசரணையுடன் இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான அடிக்கல்லினை வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் நாட்டினார்.
இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளர் ம. ராதாகிருஸ்ணன், குவைட் நிதிப்பங்களிப்பாளர்களின் பிரதிநிதி, பாடசாலை அதிபர் சா.புஹாரி, நகரசபை உறுப்பினர் பாய்ஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.