பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க மாகாணங்களுக்கு 2 பில்லியன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

பாடசாலைகளை  பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கு மாகாணங்களுக்கு  2 பில்லியன்  வழங்க  அரசாங்கம் முடிவு எடுத்திருக்கின்றது

வழங்கப்படும் இந்த நிதி உதவி மாணவர்கள் பாதுகாப்பாக மீண்டும் பாடசாலைகளுக்கு செல்ல  உதவும் என்று பிரதமர் தெரிவித்தார், டொராண்டோவில் உள்ள ஒரு பாடசாலையில்  புதன்கிழமை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இந்த நிதி உதவி மாகாணங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொருளாதார சுகாதார மேம்படுத்தல் உதவி தொகையான 19 பில்லியனை விட கூடுதல் நிதி உதவியாக இருக்கும்

ஒவ்வொரு மாகாணம் மற்றும் பிரதேசத்தின் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

மார்ச் நடுப்பகுதியில் COVID-19 நாடு முழுவதும் பரவத் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பாடசாலைகள்  மூடப்பட்டுள்ளன.