பாடசாலைகளிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் நடத்தப்படும் COVID-19 பரிசோதனை நடைமுறைகளில் மாற்றம்

ஒண்டாரியோ மாகாணம் பாடசாலைகளிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் நடத்தப்படும்  COVID-19  பரிசோதனை நடைமுறைகளில் சில மாற்றங்களை செய்திருக்கின்றது

ஒண்டாரியோ மாகாணம் வரும் வெள்ளிக்கிழமையில் (Oct02) இருந்து COVID-19 பொதுவான அறிகுறிகளான காய்ச்சல் / சளி, இருமல், மூச்சுத் திணறல், நாக்கில் உணவின் சுவை குறைதல்/இழத்தல் ஆகிய வைரஸின் நான்கு பொதுவான அறிகுறிகளில் ஒன்றை கொண்டு இருந்தால், அந்த குழந்தைக்கு COVID-19  தொற்று இல்லை என  உறுதிப்படுத்தும் வரை மட்டுமே வீட்டில் இருக்கவேண்டும்

மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, குமட்டல், சோர்வு ஆகிய அறிகுறிகள் COVID-19 இன் மிக குறைந்த அறிகுறிகளாக மாற்றப்பட்டுள்ளன

COVID-19 இன்  பொதுவான குறைவான அறிகுறிகளை கொண்ட மாணவர்கள், அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்றப்படும் வரை 24 மணிநேரம் மட்டுமே வீட்டிலேயே இருக்க வேண்டும்.

இருப்பினும், அவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரண்டாம் நிலை அறிகுறிகள் இருந்தால், ஒரு மருத்துவரிடமிருந்து தங்களுக்கு  COVID-19 இல்லை என்பதை மருத்துவ பரிசோதனை செய்து உறுதிப்படுத்தவேண்டும் அதுவரை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

Covid-19 அறிகுறிகளில் இருந்து வயிற்று வலி மற்றும் இளஞ்சிவப்பு கண் ஆகிய அறிகுறிகள் முழுதாக அகற்றப்பட்டுள்ளன