பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமா? அதிர்ச்சி தகவல்.

SP Balasubramaniam: Covid-19: SP Balasubramaniam remains critical after  testing positive, put on life support - The Economic Times

திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.