பாகுபலி நடிகரின் பிறந்தநாளில் “ராதே ஷ்யாம்'( ‘RadheShyam’) படக்குழு முக்கிய அறிவிப்பு !!

Prabhas's 'Radhe Shyam' first look goes viral

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் விரிந்தது. அத்துடன் பிரபாஸின் சம்பளமும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாகத்
தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பிரபாஸ் தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாட ரெடியாகி வருகிறார்.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது நடித்துவரும் ராதே ஷ்யாம் படத்தின் தயாரிப்ப்பாளர் வரும் அக்23 ஆம் திகதி #BeatsOfRadheShyam என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

இதுகுறித்த போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிரோயின் பூஜா ஹெஜ்டேயின் பிறந்தநாளுக்கு ஒரு போஸ்டர் வெளியான நிலையில் பிரபாஸ் பிறந்தநாளுக்கும் இதேபோல் போஸ்டர் வெளியாகவுள்ளது.