பாகிஸ்தானில் 2 குழந்தைகளுடன் சாலையில் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

பாகிஸ்தானில் நாட்டின் லாகூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த புதன் கிழமை இரவு காரில் அருகில் உள்ள ஒரு நகருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது தீடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கார் நடுவழியில் நின்றுள்ளது. இதனை அடுத்து கீழே இறங்கி அந்த பெண் உதவிக்காக காவல்துறையினரை அழைக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நெடுஞ்சாலையிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பாகிஸ்தானை உலுக்கியுள்ளது.

இதனால் வெகுண்டெலுந்த பெண்கள் கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண காவல்துறையினர், சந்தேகநபர்கள் இருவரையும் நாங்கள் டி.என்.ஏ தடமறிதல் மூலம் அடையாளம் கண்டுள்ளோம். மிக விரைவில் நாங்கள் அவர்களைச் சென்று கைது செய்வோம் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் அங்கு பெண்கள் தாய்மார்கள் என பலரும் வீதிகளில் திரண்டு பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக்கோரியும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.