பஸ் சேவைகள் நாடு முழுவதும் வழமைக்கு திருப்பம்

இன்று (30) முதல் நாடு முழுவதும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இது தொடர்பாக தெரிவிக்கையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)