பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: இண்டிகோ நிறுவனம்!

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூர் நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது முன்னதாகவே திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.