பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவில்லை என்றால் நாம் அழிந்துபோவோம்: ஐநா!

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நகரமயமாக்கல், தொழிற்சாலை கழிவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பசுமை குடில் வாயுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் வெப்பமயமாதலில் அளவு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. மேலும் கடல் மட்டம் உயர்வு பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் புவியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே உலக நாடுகளை ஒன்றினைத்து பசுமைகுடில் வாயுக்களின் அளவை குறைக்க ஐநா சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பும் பருவநிலை மாற்றத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ், புவி வெப்பமயமாதலை தடுக்க எரிசக்தி, போக்குவரத்து, ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டுவர கொரோனா தொற்றை ஒரு ஊக்கமாக கொள்ளவேண்டும் என தெரிவித்தார். மேலும் உலக சக்திகள் ஒன்றிணைந்து பசுமையான எதிர்காலத்திற்காக தங்கள் பொருளாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் அல்லது மனிதநேயம் அழிந்துபோகும்” என்றும் அவர் தெரிவித்தார்.