பயணக்காதலி….

மிதமான கூட்ட

நெரிசலில்..

அடிக்கடி 

வந்து போனது

அறிமுகமில்லா

அவள் முகம்..!

சட்டென்ற 

ஞாபகத்தால்

சுற்றும் முற்றும்

சுழன்றபடி

நேரான பார்வையை

சீராக படரவிட்டு

உன் திசைநோக்கி

உற்று பார்த்தால்

ஒன்றும் தெரியவில்லை..!

சற்று தூரம் தள்ளி

சல்லடையாய்

சலித்து பார்த்ததில்

இந்த மந்திரவிழி

அழகு…இதற்குமுன்

என்னை மயக்கியதாய்

நினைவில் இருக்கிறது..!

அட யார் தான்

இவள் என்று

அரைநொடி 

யோசித்துவிட்டு

அருகே நகரும் போது

கூச்சலிட்டபடி

கொலுசின் கால்கள்

மெல்ல மெல்ல

அடியெடுத்து

அவசரமாய் முந்திக்கொண்டது..!

ஆவல் இன்னும்

அதிகரிக்க..

இதயதுடிப்பும்

இருமடங்கானது

அடடே இவள்தான்

பயணத்தின் போது

மட்டும்…பரிட்ஷயமாய்

பார்த்துக்கொள்வோமே…

பேரூந்து நிறுத்தத்தில்

கூட -உடன்

நின்றிருப்போமே..,

நீதான்…

பலமுறை 

பார்வையை மட்டும்

பரிமாறும் என்

பயணக்காதலி..!