பண்டாரவன்னியனுக்கு வணக்கம் செலுத்தி கூட்டத்திற்கு சென்ற தலைவர்

வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் மாவீரன் பண்டாரவன்னியனியனின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தார். 
மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன் பண்டாரவன்னியன் சிலையின் படிக்கட்டு விடயம் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார். 
இதன்போது பாராளுமன்ற உறுப்பினருடன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் கதிர்காமராஜா, உறுப்பினர்களான செ. சபாநாதன், சு. ஜெயச்சந்திரன், க. கிரிபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .