பணிநீக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் ஒரு ஊழியருக்கு வழங்க வேண்டிய நட்ட ஈட்டுத் தொகை அதிகரிப்பு

தனியார் மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும்  நிறுவனங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் ஒரு ஊழியருக்கு வழங்க வேண்டிய நட்ட ஈட்டுத் தொகை 2.5 மில்லியன் ரூபாயாக (25 இலட்சம்) அதிகரித்துள்ளது.இந்த அறிவிப்பானது பெப்ரவரி 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு இலங்கை தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறையினை மீறினால், உரிய நபர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டத்தில் இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியருக்கு வழங்க வேண்டிய நட்ட ஈட்டுத் தொகை 1.25 மில்லியன் (12,50,000) ரூபாயாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.