“பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்பு பணத்தை குறைக்க உதவியது” – பிரதமர் மோடி

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

இதையொட்டி, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புபணத்தை குறைக்கவும், வரிகளை முறைப்படுத்தவும் உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்புக்கும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.