நோர்த் யோர்க் பிராந்தியத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு டொரோண்டோ நகர முதல்வர் கண்டனம்

நோர்த் யோர்க் பிராந்தியத்தில் jane & finch சந்திப்புக்கு அருகே நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கி சம்பவம் ஒன்று இடம்பெற்ற போது அப்பகுதியால் தனது தாயாருடன் நடந்து சென்றுகொண்டிருந்த 12 வயது சிறுவன் காயமடைந்தான்.

டொரோண்டோ நகர முதல்வர் ஜோன் ரோரி இந்த துப்பாக்கி பிரயோகம் ஏற்றுக்கொள்ள முடியாத எரிச்சலூட்டும் ஆயுத வன்முறை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.அத்துடன் இப்படியான ஆயுத வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோரால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.தொடர்மாடிக்குடியிருப்பொன்றின் வாகனத்தரிப்பிடத்திற்க்கு இரண்டு வாகனங்கள் சென்றதாகவும் பின்னர் ஒரு வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்கி மற்றைய வாகனத்தை நோக்கி சென்று துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.