நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் உணவுகள்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான மக்களை பாதித்துள்ளது. இந்த கொடிய வைரஸால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழிந்துள்ளனர். அதோடு நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு உள்ளது.

அதற்கு நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை மேம்படுத்த உதவும்.

சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் அதிகம் சேர்க்க வேண்டிய சில தாவர அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளைப் பரிந்துரைத்து டிவிட்டரில் வெளியிட்டது. கீழே அந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்கள் உணவிலும் அன்றாடம் சேர்க்க மறவாதீர்கள்.

முக்கியமாக இந்த உணவுகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பது மட்டுமின்றி, இவற்றை உண்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னவென்றும் காண்போம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வில், நெல்லிக்காய் இரத்தத்தின் திரவத்தை மேம்படுத்துவதற்கும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதோடு இப்பழத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான தியமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.

MamA#o Papaia inteiro e cortado – paypaya

பப்பாளி

ஆரஞ்சு பழத்தைப் போன்றே, பப்பாளியிலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இந்த பழம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு, குடலியக்கத்தை மென்மையாக நடைபெற செய்யும். அதோடு செரிமான பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

Bell Pepper

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதுடன், அதில் வைட்டமின் ஈ மற்றும் ஏ, நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், இரத்த சோகையைத் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அதில் உள்ள இரும்புச்சத்து மட்டுமின்றி, அந்த இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சியும் இருப்பது தான். எனவே அடிக்கடி குடைமிளகாயை சமைத்து சாப்பிடுங்கள்.

கொய்யா

கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இப்பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுவதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

எலுமிச்சை

எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, இதயம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறப்பான பொருளாகும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரின் அளவு மற்றும் pH அளவை அதிகரிப்பதன் மூலம், சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. அதற்கு தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பது சிறந்த வழியாகும்.