நைஜிரில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்

நைஜிரில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜிர் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரான்ஸ்  பிரஜைகள் ஆறுபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரான்ஸ் பிரஜைகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பு இதுவரை உரிமை கோரவில்லை.

எவ்வாறாயினும் போகோஹராம், அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் குழு  உட்பட மேலும் சில ஆயுததாரிகள் நைஜிரில் நிலை  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.