நேற்று 69,266 நபர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது

கோவிஷீல்ட் திட்டத்தின் கீழ் நாட்டில் நேற்றைய தினம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 69,266 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முழு அளவினையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 455,151 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 114,997 பேருக்கும் இரண்டாவது டோஸ் 31, 223 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 432 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.