நேற்று 275 பேருக்கு கோவிட்-19 தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 275 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 90 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 61 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 22 பேர் கேகாலை மாவட்டத்தையும் 10 பேர் காலி மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் இரத்தினபுரி மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்த 04 பேரும் திருகோணமலை மற்றும் களுத்துறையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்த 43 பேருக்கும் 39 பொலிஸாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.