நேற்று டொரோண்டோவில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் லிபெரல் கட்சி மீண்டும் வெற்றி

நேற்று டொரோண்டோவில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் லிபெரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது ஆனாலும் கடந்த தேர்தலை விட லிபெரல் கட்சிக்கான வாக்குகளின் எண்ணிக்கை இந்த இடைத்தேர்தலில் குறைவடைந்திருந்தது  குறிப்பிடத்தக்கது இரண்டு தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவியது குறிப்பாக Toronto Centre தொகுதியில் லிபெரல் வேட்பாளர்  Marci Ien கும் புதிதாக தலைவராக தெரிந்து எடுக்கப்பட்ட பசுமைவாதிகள் கட்சி தலைவர்  Annamie Paul.கும் இடையில் கடும் போட்டி நிலவியது இறுதியில் லிபரல் வேட்பாளர் Marci Ien வெற்றி பெற்றார்

அடுத்த தொகுதியான York Centre,இல் இறுதிவரை யார் வெல்லப்போகிறார்கள் என்று தெரியாத அளவுக்கு கடும் போட்டி லிபெரல் வேட்பாளர் Ya’ara Saks  கும் கன்செர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Tiangson, Julius கும் இடையில் காணப்பட்டது இறுதியில்  Ya’ara Saks 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

இந்த இரண்டு தொகுதிகளிலும் லிபெரல் கட்சி வெற்றி பெற்றாலும் முதல் தேர்தலை விட மக்களின் ஆதரவு குறைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்