நேர்முகத்தேர்விற்கு குவிந்த பயிலுனர்கள்!!

நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட நேர்முகத்தேர்வில் பலர் கலந்துகொண்டனர்.இலங்கை நிலஅளவை திணைக்களத்தின் கள உதவியாளர்களின் பயிற்சிக்கான தேசியதொழில் தகுதி- 2 (NVQ – 2) பயிற்சிபாடநெறி தேர்வுக்கான நேர்முக தேர்வுகள் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பிரதேச நிலஅளவை திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.குறித்த நேர்முகத்தேர்வு சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் வடக்குமாகாணத்தை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் அதில்  பங்கெடுத்திருந்தனர்

#srilanka_news