நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனோ உறுதி.!!82 பேருக்கு பரிசோதனை!!

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களிற்கு கொரொனா தொற்று இருந்தமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெற்கை சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
பரிசோதனை முடிவுகளிற்கமைய தென்பகுதிகளில் இருந்து அண்மையில் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த 3 ஊழியர்களிற்கு கோரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் அதில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்றையதினம் வெளியாகியது. அதன்படி அந்த இரண்டு ஊழியர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நிறுவனத்தை சேர்ந்த 82 ஊழியர்களிற்கு இன்றையதினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.