நுவரெலியா- ஹற்றன் பகுதியில் மேலும் 10பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நுவரெலியா- ஹற்றன் பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பாக ஹற்றன்- டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஹற்றன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 10பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், குறித்த நபரின் குடும்பத்தினர் நால்வர் உட்பட மேலும் ஆறு பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து ஹற்றன் நகரை முழுமையாக மூடி, கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.