நீர்வேலியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்!

நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் சென்ற வாள் வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு புகுந்த வாள் வெட்டுக் குழு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில், வாள்கள், கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

முப்படைகள், பொலிஸாரை சந்தித்து யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என வடமாகாண ஆளுநர் கலந்துரையாடிய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.