நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகர சபை பணியாளர் ஒருவரினால் இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அந்த கைக்குண்டுகள் குறித்த குப்பைத் தொட்டியில் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக இன்னும் உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.