நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீரை விநியோகிக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.