
அடி எடுத்து வைக்கையிலே
தேடுது உனையே மனம்…
சோர்ந்து துவளும் பொழுது …
எனை நானே தட்டி கொண்டாலும்
தேடுது உனையே மனம்…
தூரத்தில் தெரிகின்ற கூட்டத்தில்
நீ பேசிக்கொண்டிருந்தாலும்
என்னுடன் இல்லை என்ற கோபமில்லை…
எனக்கு தான் தெரியுமே
நீ அங்கிருந்தாலும்
உன் மனம் என்னிடம் என்று..
என் வளர்ச்சியில் உனக்கும்
உன் வளர்ச்சியில் எனக்கும்
சந்தோசத்தை தவிர
வேறு எதையும் எதிர்பாராத
உள்ளங்களாய் நாம்