நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படத்தை வெளியிட்ட அஜித் படத்தின் நாயகி!

Piaa Bajpai movies, filmography, biography and songs - Cinestaan.com

நடிகை பியா பாஜ்பாய் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

‘பொய் சொல்ல போகிறோம்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கோ’ , ’கோவா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’ஏகன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு காணாமல் போன அவர் இப்போது மீண்டும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்துள்ளார்.