நீங்காத என் சுவாசம் நீ….

Wet Lips by Marcelo Lima / 500px

காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக
தினமும் தன் காதலனுக்காகவோ காதலிக்காகவோ காத்திருப்பார்கள்.
அந்த காத்திருப்பு அவர்களுக்கு சுகமாக தான் இருக்கும்.
காத்திருப்பிற்கு பின் தன் இணை வந்ததும்
அவர்களோடு ஒரு செல்ல சண்டை நடக்கும்.
அந்த சண்டை கூட அவர்களது உறவை மேம்படுத்தும்.
இது தான் இயல்பான காதல் வாழ்க்கையை.

காதல் செய்கையில் காத்திருப்பு சுகமாக இருந்தாலும்,
காதல் ஜோடியின் நிரந்தர பிரிவிற்கு பிறகு,
ஏதோ ஒரு நம்பிக்கையில்
தன் துணை தன்னை தேடி நிச்சயம் ஒரு நாள் வரும்
என்று எண்ணி காத்திருப்பது மரணத்திலும்
கொடிய ஒரு வலியை தரும் என்பதே உண்மை.
அந்த சூழலில் அவர்கள் காதலுக்காக மட்டும் இல்லை
தினமும் தூக்கத்திற்காக கூட காத்திருக்க தான் வேண்டும்.
அவளுக்கு துக்கம் அவர்கள் நெஞ்சில் சுமையாக இருக்கும் என்பதே உண்மை.