நிரவ் மோடியின் காவல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள நிரவ் மோடியின் காவல்  எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி  தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து அமுலாக்கத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அவர் லண்டனில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அத்துடன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares