நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!

Tamilrockers 2020: Download Free Bollywood, Hollywood & Tamil Movies

தமிழ் சினிமாத்துறையினரின் மிகப்பெரிய கவலையாக இருப்பது பைரஸி. அதாவது சிறிய படம் பெரிய படம் என்றில்லாது எல்லா படங்களையும் சில மணி நேரத்தில் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் வெளிடுவது, அல்லது படம் வெளிவருவற்கு முன்பே இணையதளத்தில் பதிவேற்றுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைத்துறையினரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்தனர். இந்நிலையில் இந்த பைரஸியை ஒழிக்க சீனா ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று திடீரென சமூகவலைதளங்களில் தமிழ் ராக்கர்ஸ் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அந்த இணையதளத்தை அனுக முயன்று முடியாமல் போன ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பகிரப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாக சினிமாகாரர்களுக்கு தலைவலியாக இருந்த தமிழ்ராக்கர்ஸ் நிஜமாகவே முடக்கப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் மூடப்பட்டாலும் டெலிகிராமில் எல்லா படங்களும் கிடைக்கின்றனவே என்ற நக்கல் குரல்களும் எழாமல் இல்லை.