நினைவுத் தூபி அடித்துடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்த மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபையின் நேற்றைய 39ஆவது அமர்வின்போது சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வு நேற்று முற்பகல் 10 மணியளவில் சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்றபோது அஞ்சலி செலுத்தப்பட்டது.