நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணை விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.