நாளாந்த மின்சார கேள்வி அதிகரிப்பு

தற்போது நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாளாந்த மின்சார கேள்வி அதிகரித்துள்ளது.

இரவு நேரங்களில் மின்சாரத்திற்கான கேள்வி 2,500 மெகாவாட்டிற்கு அதிகரித்து காணப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த வாரங்களில் நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நீடிக்காது என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 66 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.