நானி & நஸ்ரியா படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியீடு!

நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் படத்திற்கு அண்டே சுந்தரானிகி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.
இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு படத்திலும் இந்த ஆண்டு இரண்டு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விவேக் அதெரியா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் தான்நஸ்ரியாவின் முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் அண்டே சுந்தரானிகி என்றும் முதல் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.