நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க ரஷ்யா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க ரஷ்யா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி பொது போக்குவரத்து உட்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அனைத்து இடங்களிலும் முக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இரவு 11 மணி முதல் 6 மணிவரை மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு ரஷ்யாவின் நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழு பிராந்திய அரசாங்கங்களுக்கு அறிவுறுத்துகிறது. ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் 320 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு புதிய தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 17347 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலகின் நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளமை குறிப்பிடத்தக்கது.