நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இதுவரை நாட்டில் 18 லட்சத்து 55 ஆயிரத்து 746 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ப​ட்டு  உள்ளனர். இதில் ஐந்து லட்சத்து 86 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், 12 லட்சத்து 30 ஆயிரத்து 510 பேர் சிகி​ச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளவர்கள் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 938 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.