நாட்டில், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் மக்களின் நடமாட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக சுகாதார வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது

நாட்டில், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் மக்களின் நடமாட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக சுகாதார வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் குறித்த வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நாட்டின் தற்போதைய நிலை 3ஆவது ஆபத்தான நிலை என்பதனால் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

மேலும், பேருந்து மற்றும் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்தின் இருக்கைக்கு நுற்றூக்கு 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.

அதேபோன்று அரச மற்றும் தனியார்த்துறை அலுவலகங்களில் குறைந்தபட்ச ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும். வியாபார நிலையங்களில் 50சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் மூடப்பட வேண்டும். நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.