நாட்டிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் – தமிழகத்திற்கு 2ம் இடம்!

மாநிலங்களின் நிலையான வளர்ச்சி அடிப்படையில் வெளியிடப்படும் மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் இந்த ஆண்டிற்கான பட்டியல் நேற்று வெளியானது. இதில் பெரிய மாநிலங்கள், சிறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 3 வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

பெரிய மாநிலங்கள் பட்டியலில் 18 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில்  1.3882 புள்ளிகளுடன் கேரளா முதல் இடத்தையும், 0.9123 புள்ளிகளுடன் தமிழகம் 2ம் இடத்தையும், 0.5314 புள்ளிகளுடன் ஆந்திர பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

1. கேரளா – 1.389
2. தமிழகம் – 0.912
3. ஆந்திரா – 0.531
4. கர்நாடகா – 0.468
5. சட்டீஸ்கர் – 0.429
6. தெலங்கானா – 0.388
7. மகாராஷ்டிரா – 0.143
8. பஞ்சாப் – 0.092
9. குஜராத் – 0.054
10. மத்திய பிரதேசம் – 0.345