நாட்டின் முடக்கம் தொடர்பாக அமைச்சரவை முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில்லை என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி இது குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த முறையை விட இம்முறை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவுகின்றது எனவும் அமைச்சரவையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்த தீர்வு எனவும் அமைச்சரவை  வலியுறுத்தியுள்ளது.