நாட்டின் சில பகுதிகளில் அதிக பயணிகளுடன் பேருந்துகள் பயணிப்பதாக முறைப்பாடு

கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற நிலைமையிலும் நாட்டின் சில பகுதிகளில் அதிக பயணிகளுடன் பேருந்துகள் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை கண்காணிப்பதற்காக குழுக்களை நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.சுகாதார வழிகாட்டல்களுடன், பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஏற்ப பேருந்துகள் பயணிக்கின்றதா என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளனர்.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நாளை முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.