நாங்க ரொம்ப பிஸி… சுந்தர் சி படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சுந்தர் சி தயாரிப்பில் அவரது உதவியாளர் பத்ரி இயக்கும் புதிய படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கன்னட இயக்குனர் ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னடப் படமான மாயாபஜார் 2016 என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தனது உதவியாளர் பத்ரியின் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இதில் பிரச்சன்னா மற்றும் ரைசா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

ஆனால் தொடங்கிய வேகத்தில் இப்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்திய படக்குழு படத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை த்ரில்லரான இந்த படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.