நயன்தாரா படத்தின் விலையை ஒரே அடியாக ஏற்றிய விக்னேஷ் சிவன் – எல்லாம் இந்த படத்தால்தான்!

Nayanthara and Beau Vignesh Shivan Celebrate Onam 2020 Together, Share  Celebration Pics on Instagram - Report Door

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்துள்ள விக்னேஷ் சிவன் அந்த படத்தின் விலையை அதிகமாக சொல்வதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்த படத்துக்காக நெற்றிக்கண் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நயன்தாரா கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் திரையரங்க உரிமையை மட்டும் 9 கோடி ரூபாய் என சொல்லியுள்ளாராம் விக்னேஷ் சிவன். இதற்குக் காரணம் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விலைக்கு ஓடிடியில் விற்கப்பட்டுள்ளதுதானாம்.