நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று இணையத்தில் வெளியாவதாக தகவல்..

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று இணையதளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அம்மன் சமகாலத்தில் உலகிற்கு வந்தால் என்னவாகும் என்ற வித்தியாசமான கோணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பு உறுதிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.